பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில சாலையோர மிதிவண்டி போட்டிக்கு தேர்வு.

Peravurani Town
0

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில சாலையோர மிதிவண்டி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த அக்.27-ம் தேதி அன்று தஞ்சாவூர், கும்பகோணம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய பகுதிகள் இணைந்த, தஞ்சாவூர் மண்டல அளவிலான சாலை மிதிவண்டிபோட்டி கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்புமாணவன் எஸ்.நந்துலால் மென்மேலோர் பிரிவில் இரண்டாம்இடமும், 9 ஆம் வகுப்பு மாணவன் எஸ்.அஜய் இளையோர்பிரிவில் முதலிடமும் பெற்று மாநில அளவில் நடைபெற உள்ளசாலையோர மிதிவண்டி போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் அ.கருணாநிதி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஏ.டி.சுந்தரராஜன், பொருளாளர் ஆர்.பி.இராசேந்திரன், துணைத்தலைவர்கள் எம்.சுந்தர்ராஜன், ஏ.தெட்சிணாமூர்த்தி, ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சி.குமாரவேலு, உடற்கல்வி இயக்குநர் சி.ராஜ்குமார், மா.சோலை, ச.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பாராட்டி பரிசளித்தனர்.
நன்றி:தீக்கதிர் 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top