பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவர் கவியரசன் 1500 மீ. ஓட்டப்போட்டியில் 2.42 விநாடியில் கடந்து முதலிடத்தைப் பெற்றார்.மாணவர் டி.எஸ்.மணிகண்டன் 5000 மீ. ஓட்டப்போட்டியில் 2-ஆம் இடம் பெற்றார். 9 ஆம் வகுப்பு மாணவர் கோகுலகிருஷ்ணன் குண்டு எறியும் போட்டியில் 9.52 மீட்டர் எறிந்து3-ஆம் இடம் வென்றார். இவர்கள் மாநில தடகள போட்டிக்குதகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் அ.கருணாநிதி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர்வி.ஏ.டி.சுந்தரராஜன், பொருளாளர் ஆர்.பி.இராஜேந்திரன், துணைத்தலைவர்கள் எம்.சுந்தர்ராஜன், ஏ.தெட்சிணாமூர்த்தி, ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சி.குமாரவேலு, உடற்கல்வி இயக்குநர் சி.ராஜ்குமார், மா.சோலை, ச.முத்துராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.
நன்றி:தீக்கதிர்