பேராவூரணி அருகே விவசாயி ஒருவரின் கிணற்றில் மாற்றம் ஏற் பட்டு, தண்ணீர் தளும்பியதால் கிராமமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வலப்பிரமன்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரவிச்சந்திரன். இவரது வயலில் 1980-ம் ஆண்டு சுமார் 40 அடி ஆழத்தில் வெட்டப்பட்ட கிணறுஒன்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டதால், கிணற்றில்உள்ள நீரும் குறைந்து விட்டது. இதையடுத்து ரவிச்சந்திரன் கிணற் றில் 100 அடி ஆழத்திற்கு போர்வெல் போட முயன்றுள்ளனர். தண்ணீர் கிடைக்கவில்லை. இதையடுத்த அந்ததிட்டத்தை கைவிட்டு விட்டார். இதையடுத்து தொடர்ந்து மழை பெய்ததால் கிணற்றில் தண்ணீர் ஊறியது. 37 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியது. ரவிச்சந்திரன் வயலின் அருகே மற்றொரு விவசாயி போர்வெல் அமைத் துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாள் முன்பிருந்து ரவிச்சந்திரன் கிணற்றில் தண்ணீர் பொங்கி தளும்பி உள்ளது. இதையடுத்து அப்பகுதி வழியாக சென்ற நெடுஞ்சாலை துறை பணியாளர் நீலகண்டன், கிணற்றை பார்த்து விட்டு, பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய தலைமை அலுவலர் சித்தார்த்தன் இருவருக்கும் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கிணற்றை பார்த்துவிட்டு, ஆட்சியருக்கும் புவியியல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். மேலும் இந்த மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் கிராமமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நன்றி: தீக்கதிர்