திடக்கழிவு மேலாண்மை குப்பை சேகரிப்பு வாகனம்.

Peravurani Town
0



பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி சனிக்கிழமை அன்று சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பேராவூரணி பேரூராட்சி தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் முன்னிலையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சிக்கு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தூய்மை பாரதம்-திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிப்பதற்காக துப்புரவு தொழிலாளர்கள் பயன்படுத்த ஏதுவாக ரூ 2.5 இலட்சம் மதிப்பீட்டில் 7 மூன்று சக்கர சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 13 இலட்சம் மதிப்பீட்டில் ஆதனூரில் அமைக்கப்பட்டுள்ள, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, ஆழ்துளைக்கிணறுடன் இணைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநில கயறு வாரியத்தலைவர் எஸ்.நீலகண்டன், பேரூராட்சி தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர்கள் உ.துரைமாணிக்கம், ஆர்.பி.ராஜேந்திரன் மற்றும் பால்.ஏ.பக்கர், கோவி.இளங்கோ, கொன்றை கணேசன், எஸ்.வி.பி.ரவிசங்கர், பாசறை கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நன்றி:அதிரை நியூஸ்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top