பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவியர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இளையோர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பாக நடைபெற்ற கல்விக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சி.ராணி தலைமை வகித்தார். மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வி.கங்காதேவி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு துறை அலுவலர்கள் கே.சண்முகசுந்தர், ஜி.குழந்தைவேலு, உதவி கணக்கு அலுவலர் கே.முத்துக்குமரன் ஆகியோர் போட்டித் தேர்வுகளை மாணவ, மாணவிகள் எவ்வாறு எதிர்கொள்வது, வேலைவாய்ப்பிற்கான வழிமுறைகள் குறித்து பேசினர்.ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், பேராசிரியர்கள் எஸ்.நித்தியசேகர், வி.வினோத்குமார், ஏ.விமலா, என்.நிஷா, எஸ்.பிருந்தா, ஜே.சுஜிதா கலந்துகொண்டனர். மாவட்ட பிற்பட்டோர் நல கண்காணிப்பாளர் வி.கண்ணகி நன்றி கூறினார்.
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவியர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி.
பிப்ரவரி 28, 2019
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க