பேராவூரணி பகுதிகளில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் விழிப்புணர்வு மொய்விருந்து.

IT TEAM
0

பேராவூரணியில் தேர்தல் விழிப்புணர்வு மொய்விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமணம், காதணி விழா, புதுமனை புகுவிழா போன்ற விழாக்களுக்கு வருவோர், மொய் எழுதி செல்வது வழக்கம். சுபகாரியங்கள் இல்லாவிட்டால் கூட, மொய்விருந்து விழா என தனியாக நடத்தி, கறிவிருந்து வைத்து மொய் பணம் வசூல் செய்யப்படுவது உண்டு .
தஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை ஆலோசனையின் பேரில், நேர்மையான மற்றும் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, பேராவூரணி தேர்வு நிலைப் பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை தேர்தல் விழிப்புணர்வு மொய்விருந்து விழா நடைபெற்றது .விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, மாதிரி வாக்குப்பதிவில் மாதிரி சின்னங்களில் வாக்களித்து, தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொண்டனர்.மேலும், பொதுமக்களுக்கு சந்தனம், பூ கொடுத்து தேநீர் 
விருந்தளித்து வரவேற்பளிக்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். 
வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, பேரூராட்சி தலைமை எழுத்தர் வீ.சிவலிங்கம், தேர்தல் பிரிவுத் துணை வட்டாட்சியர் யுவராஜ், மண்டலத் துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் அஷ்ரப் அலி, சுப்பிரமணியன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் தர்ஷனா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top