பேராவூரணி ஏந்தல் அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

IT TEAM
0

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா இன்று ஏப்ரல் 10-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முடப்புளிக்காட்டில் ஏந்தல் அருள்மிகு ஸ்ரீநீலகண்டப்பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல வருடங்களாக சித்ரா பௌர்ணமி பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீலகண்டப்பிள்ளையார் தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்திவார்கள்.

தீராத வினை தீர்க்கும் நீலகண்ட பிள்ளையார் என்று இந்த கோவில் இறைவனை பக்தர்கள் அழைக்கின்றனர்.

(2019) இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி திருவிழாவின் நிகழ்ச்சி நிரல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி திருவிழா வரும் ஏப்ரல்  மாதம் 10-ந்தேதி(புதன்) கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் மாதம் 21-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் முடிவடைகிறது.

முதல் நாளான ஏப்ரல் மாதம் 10-ந்தேதி(புதன்) கொடியேற்றம் நடைபெறுகிறது.

11-ம் தேதி(வியாழன்) வண்ணமயில் வாகன சேவையும்,

12-ந்தேதி(வெள்ளி) காமதேனு வாகன சேவையும், 

13-ந்தேதி(சனி) பூத வாகன சேவையும் நடைபெறுகிறது.

14-ந்தேதி(ஞாயிறு) அன்ன வாகன சேவை நடைபெறுகிறது.

15-ந்தேதி(திங்கள்) மயில் வாகன சேவையும், 

16-ந்தேதி(செவ்வாய்) ரிஷப வாகன சேவையும், 

17-ம் தேதி (புதன்) திருவிழாவில் குதிரை வாகன சேவையும் நடைபெறுகிறது.

18-ந்தேதி(வியாழன்) காலையில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். மாலையில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் தேர்விழா பிரம்மாண்டமாக நடைபெறும்.  12 நாள்கள் நடக்கும் திருவிழாவில் 18-ம் தேதி நடக்கும் இந்த விழா தான் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன்றைய தினத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் நடந்து வந்து காவடி மற்றும் பால் குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இன்றைய தினத்தில் காவடி மற்றும் பால்குடம் எடுத்து விநாயகரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைத்த முடியாத நம்பிக்கையாக உள்ளது.

19-ந்தேதி(வெள்ளி) தீர்த்தம் விழாவும், 20-ம்தேதி(சனி) தெப்ப உற்சவமும், திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

12 நாள் திருவிழாவின் கடைசி நாளான 21-ந்தேதி  (ஞாயிறு) விடையாற்றி உற்சவத்துடன் இந்த வருடத்திற்கான சித்ரா பௌர்ணமி திருவிழா முடிவடைகிறது.

பேரராவூரணியில் உள்ள இந்த நீலகண்டப்பிள்ளையார் கோவில் விநாயகருக்கும் மிகவும் பிரபலமானதாகும். பேராவூரணி டவுன்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top