பேராவூரணி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உளுந்து, சிறுதானியப் பயிர்கள் பயிரிட அறிவுறுத்தல்.

IT TEAM
0

பேராவூரணி வட்டாரத்தில் தற்சமயம் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கடந்த ஏழுமாத காலத்தில் இவ்வட்டாரத்தில் ஒரு மி.மீ அளவு கூட மழை பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், இவ்வருடம் நெல்லுக்கு பதிலாக குறைந்தநீர்த் தேவையுடைய உளுந்து மற்றும் சிறுதானிய பயிர்களைசாகுபடி செய்ய முயற்சி செய்ய வேண்டும். ஒரு ஏக்கர்நெல் சாகுபடிக்கான நீரைக் கொண்டு, 4 ஏக்கர் உளுந்துபயிரும், 5 ஏக்கர் சிறுதானியப் பயிர்களான கம்பு, கேழ்வரகுமற்றும் மக்காச்சோளம் போன்ற தானிய பயிர்களையும் சாகுபடி செய்யலாம்.தானியப் பயிர்களில் மக்காச்சோளம் குறைந்த காலத்தில், குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடியபயிராகும். மக்காச்சோளப் பயிரைத் தாக்கக்கூடிய படைப்புழுவினை கண்காணிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளால் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். மாறி வரும் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப, விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடி செய்து அதிக லாபம் பெற வேண்டுமென பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top