பேராவூரணி இளைஞர்கள் முயற்சியால் பெரியகுளம் தூர்வாரும் பணி தொடக்கம்.

Peravurani Town
0

பேராவூரணி பெரியகுளத்தை தூர்வாரும் முயற்சியில் இளை ஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணியில் உள்ளது பெரியகுளம் ஏரி. இது சுமார் 564 ஏக்கர் பரப்பளவும், 9 மடையும் கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படா மலும், ஆக்கிரமிப்பில் உள்ளதா லும் வெகுவாக சுருங்கி விட்டது. மேலும் நகரில் உள்ள குப்பைகள், கட்டிடக் கழிவுகள், புயலால் சாய்ந்த மரங்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டு, நீர்வரத்து பாதை கள் அடைக்கப்பட்டு, மணல் மேடிட்ட நிலையில் மரங்களும், புதர்களும் மண்டிய நிலையில், பல ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு, பயன்பட்டு வந்த பெரியகுளம் தற் போது தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்படுகிறது.  ஒரு காலத்தில் விவசாயத்திற் கும், கால்நடைகள் தாகம் தணிக்க வும், நிலத்தடி நீர் மட்டம் குறையா மல், ஆழ்துளைக் கிணறுகளுக்கு முக்கிய நீராதாரமாகவும் விளங்கிய பெரியகுளம் வீணாகி இருப்பது கண்டு இப்பகுதி இளைஞர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். பெரிய குளம் பயன்படுத்தும் முக்கிய பாசனதாரர்களான பொன்காடு, முடப்புளிக்காடு, பழைய பேராவூ ரணி கிராமத்தார்கள், மற்றும் இளை ஞர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து, பெரியகுளத்தை தூர்வா ரும் முயற்சிக்கு ஆதரவு திரட்டி னர்.
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை மாலை இளைஞர்கள் ஒன்று கூடி, கடைமடைப் பகுதி ஒருங்கி ணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் பேராவூரணி ஆனந்தம் விழா அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து திங் கள்கிழமை காலை பெரியகுளம் தூர்வாரும் பணி தொடங்கியது. இதில் சங்க தலைவர் ராம்குமார், செயலாளர் பிரபாகரன், பொருளா ளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் நவீன், நிமல் ராகவன், சேந்தங்குடி தங்க.கண்ணன், கொத்தமங்கலம் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் இந்திரா க.அன்பழ கன், என்.அசோக்குமார், வி.ஏ.டி.சுந்தர்ராஜன், துரை.கதிரவன், முன் னாள் பேரூராட்சி துணைத் தலை வர் யுவராஜ், தொழிலதிபர் இ.வீ.காந்தி, வர்த்தக கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளர் ஏ.டி.எஸ்.குமரேசன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
ஒரு ஜேசிபி இயந்திரம் மற்றும் 3 டிராக்டர் வாகனங்களை பயன் படுத்தி மண் எடுத்து முதற்கட்ட மாக கரைகளைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந் நிலையில் உள்ளூர்வாசியும், தற்போது அமெரிக்காவில் பணி யாற்றி வருபவருமான குசேலராக வன், சிவகுமார் தூர்வாரும் பணிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார். முதல் நாள் தொடங்கி நடக்கும் பணிக்கு ஆகும் செலவான ரூ20 ஆயிரத்தை பொன்காடு பகுதி இளைஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், இரண்டாம் நாள் செலவை நீல கண்டன் என்பவர் ஏற்றுள்ளார். 
மேலும், இப்பணிக்காக அரசை எதிர்பார்த்து காத்திராமல், தங்கள் சொந்த முயற்சியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வரும் இளை ஞர்களுக்கு பலரும் நிதிஉதவி அளிக்க முன்வந்துள்ளனர். பொது மக்கள் மற்றும் நன்கொடையா ளர்கள் பங்களிப்புடன் பெரிய குளத்தை தூர்வார முன்வந்துள்ள இளைஞர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்ந சீர மைப்பு பணியில் சுற்றுவட்டார பகுதி மக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.  ஒவ்வொரு குளமாக தூர்வாரி, மீண்டும் நீர்வளத்தை பாதுகாக்க வும், ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்கவும் சங்கல்பம் செய்திருப்பதாக கடை மடைப் பகுதி ஒருங்கிணைந்த விவ சாயிகள் சங்க நிர்வாகிகள் தெரி வித்ததோடு, கரைகளைப் பலப் படுத்த மரக்கன்றுகளை நட்டு, தொடர்ந்து அவற்றை பராமரிக்க வும் முடிவு செய்துள்ளனர்.
நன்றி: தீக்கதிர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top