பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-20 கல்வி ஆண்டிற்கான மூன்று புதிய பாடப் பிரிவுகள் தொடக்கம்.

IT TEAM
0

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-20 கல்வி ஆண்டிற்கான மூன்று புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் எஸ் .இராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் எம்ஏ தமிழ் இலக்கியம்,பிஎஸ் ஸி இயற்பியல், பிஎஸ்ஸி வேதியியல் ஆகிய புதிய பாடப் பிரிவுகள் 2019-20 கல்வியாண்டில் தொடங்கப்பட உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 19.8.2019 முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்படும். பிஎஸ்ஸி இயற்பியல் மற்றும் வேதியியலை விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் கணித பாடத்தினை கட்டாயமாக பயின்று இருக்க வேண்டும்; எஸ்சி- எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்ப படிவம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top