தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடக்கிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணையை தமிழக அரசு அரசிதழில் இன்று (டிச.09) திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் - 27 (முதல் கட்டம்)
இதில், தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருப்பானந்தால், திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களுக்கு வரும் டிச.27 ந் தேதியும்,
டிசம்பர்-30 (2 ஆம் கட்டம்)
பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூர், திருவோணம் ஆகிய ஒன்றியங்களுக்கு வரும் டிச.30 ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.