புதுக்கோட்டையில் போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா 02-01-2022.

IT TEAM
0


புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும்  ஐஏஎஸ்/ டிஎன்பிஎஸ்சி/வங்கி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மா. மன்னர் கல்லூரியில் வரும் 02.01.2022  ஞாயிறன்று தொடங்கவிருக்கிறது. இப்பயிற்சி வகுப்புகளை  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைக்கவுள்ளார். இந்த இலவச பயிற்சி வகுப்புகள், வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னர் கல்லூரியில் நடைபெறும். முற்றிலும் இலவசம். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து பயனடைய, தன்னார்வ பயிலும் வட்ட அறக்கட்டளை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தொடர்புக்கு 88832 18718 - 93614 95512


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top