பேராவூரணி வட்டம், ஆதனூர் பகுதியில் நிலமற்ற ஏழைகள் 68 பேருக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
பேராவூரணியில் வட்டாட்சியராகப் பதவி ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திற்குள் இப்படியொரு சிறப்பான பணியைச் செய்துள்ள வட்டாட்சியருக்கும் அவரது தலைமையில் பணியாற்றும் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் என ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
திருவள்ளுவரைத் தொடர்ந்து வள்ளலார், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், மறைமலைஅடிகள், பாவலரேறு பெருஞ்சித்திரனார், வ.உ.சி. போன்ற நூற்றுக்கணக்கான தமிழ்ச்சான்றோர்களின் பெயர்களைத் தாங்கிய எளியவர்களுக்கான குடியிருப்புகளை உருவாக்குவதுதான் இலக்கு என்று சிரிக்கிறார் பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார்.
இந்த நேரத்தில் எளியவர்களின் வாழ்வாதாரம் காத்திட தொடர்ந்து துணை நிற்கும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் புரத்திற்கு பேராவூரணி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர், சாலை, கழிப்பிடம், தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அரசின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்பட்டு அந்த ஏழைக் குடும்பங்களின் புதுமனைப் புகுவிழாவை விரைவிலேயே நாம் காணவேண்டும்.
பூக்கொல்லை - ரெட்டவயல் சாலையில், வளம்மீட்பு பூங்கா அருகே, திருவள்ளுவர்புரம் என பெயரிடப்பட்ட அந்த இடத்தை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் திறந்து வைத்தார்.