பேராவூரணியில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மணிகள்.
பேராவூர ணியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து முளைவிட்டு சேதமடைந் துள்ளன. பேராவூரணி சட்டமன்ற தொகுதி யில் 2021 ஆம் ஆண்டு குறுவை சாகு படிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலானோர் வீட்டில் முடங்கியி ருந்ததால் பரவலாக அனைத்து பகுதி களிலும் விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக இலக்கை விஞ்சி சாகுபடி செய்யப்பட்டது. இதனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் இயல்பான அளவைக் காட்டி லும் அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பேராவூரணி பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பேரா வூரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, அங்கிருந்து அரிசி ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பப்படுவது வழக்கம். ஆத்தாளூர் வீரகாளியம்மன் கோயி லுக்கு சொந்தமான இடத்தில் அமைந் துள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக பாதுகாப்புக்காக மூடி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் தார்ப்பாய்கள் கிழிந்து சேதமடைந்ததாலும், முழங் கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றதா லும் நெல் மூட்டைகள் நனைந்து முளை விட்டுள்ளன. கோயிலுக்கு சொந்தமான இடம் என் பதால் சாலை வசதி போடப்படாமல், மழைக்காலங்களில் லாரிகளில் சென்று மூட்டைகளை ஏற்ற முடியாத நிலை உள்ளது. இந்த நெல்மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசி யாக்கி பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யும் போது, அரிசி கருப்பு நிறமாக இருப்பதா கவும், சமையல் செய்யும்போது சாதம் நாற்றமடிப்பதாகவும் புகார்கள் வரு கின்றன. தொடர்ந்து மழை பெய்யும் சூழல் நிலவுவதால், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முழுவதும் சேதமடை வதற்கு முன்பு, மூட்டைகளை அர வைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்ப தோடு, கூடுதலாக பாதுகாப்பான சேமிப்பு கிடங்கு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: தீக்கதிர்