பேராவூரணியில் செயல்பட்டு வரும் சமூக சேவை அமைப்பான, பேரை துளிர் நண்பர்கள் அறக் கட்டளை சார்பில், பெருமகளூர் வடபாதி வெள்ளாக்குளக் கரையில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற் றது. பேராவூரணி நகர வர்த்தகர் கழக முன்னாள் பொருளா ளர் எஸ்.ஜகுபர்அலி தலைமை வகித்தார். பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை பொருளாளர் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி வரவேற்றார். கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவர் வ.பாலசுப்பிரமணியன், பொருளா ளர் பெஸ்ட் குமார், பெருமகளூர் பி.கமலநாதன் முன்னிலை வகித்தனர். பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் மரக்கன்று களை நட்டு விழாவினை தொடங்கி வைத்து பேசினார். இதில், பெருமகளூர் பேரூராட்சி செயல் அலுவலர் புனிதவதி, முன்னாள் பேரூராட்சி தலைவர் மா.சண்முக சுந்தரம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, தலைமையாசிரியர் கோவி. தாமரைச் செல்வன், வருவாய் ஆய்வாளர்கள் கமலக் கண்ணன், முத்துக்கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சிவ மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேம்பு, புங்கன், வாகை உள்ளிட்ட 300 மரக்கன்றுகள் குளக்கரையில் நடப்பட்டன.
பெருமகளூர் வடபாதி வெள்ளாக்குளக் கரையில் மரக்கன்றுகள் நடும் விழா.
ஜனவரி 09, 2022
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க