தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பருவத்திற்காக இதுவரை 191 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில், நெல் கொள்முதல் தொடர்பாக விவ சாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் புதனன்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், மன்னார் குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவ லகக் கூட்டரங்கிலிருந்து, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், மாவட்ட ஆட் சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநி மாணிக் கம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியதா வது:- ‘‘குறுவை பருவத்தில் 326 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் 11 மொபைல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 1,97,633 மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், 40,619 பயனாளிகள் பயனடைந்துள்ள னர். மேலும், 2021-2022 சம்பா தாளடி இலக்கான 3,12,599 ஏக்கருக்கு பதி லாக கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவில் சாதனையாக 3,42,973 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. நெல் மகசூல் தோராய மாக 8.22,000 மெட்ரிக் டன் எதிர் பார்க்கப்படுகிறது. இதில் 7,25,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்வதற் காக 650 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப் பட்டு சம்பா பருவத்திற்காக 17.01.2022 வரை 191 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 8,559 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல் கழக நவீன அரிசி ஆலை, தனியார் அரவை முக வர்கள் மற்றும் பிற மண்டலங்களுக் கும் தலைமை அலுவலக ஒதுக்கீட் டின்படி உடனுக்குடன் இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்தும், பத்திரி கையாளர்களிடமிருந்தும் எவ்வித புகாருக்கும் இடமின்றி விவசாயிகள் காத்திருக்காமல் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்திடவும், கொள் முதல் பணியாளர்கள் மற்றும் கொள் முதல் அலுவலர்களுக்கும் சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது’’ என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சி யர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா, பயிற்சி ஆட்சியர் கௌஷிக், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேக ரன்(திருவையாறு), டி.கே.ஜி.நீல மேகம் (தஞ்சாவூர்), க.அன்பழகன் (கும்பகோணம்), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல பொது மேலாளர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.