புனல்வாசல் சீருடை பணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி.
புனல் வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் புனல் வாசல் தன்னார்வ பயிலும் ( Punalvasal Study Circle ) வட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் காண (Police Exam)தேர்விற்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியின் தொடக்க விழா 14/08/2022 அன்று காலை 09 மணிக்கு புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது . இத்தொடக்க விழாவில் ஏற்கனவே காவலர் தேர்வில் வெற்றி பெற்று தற்போது பணியில் இருப்பவர்கள் கலந்து கொண்டு இதேர்வில் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள்.
அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புனல் வாசல் தன்னார்வ பயிலும் வட்டத்தில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சியும் இலவச மாதிரி தேர்வுகளும் நடைபெற உள்ளது
எனவே காவலர் தேர்வுக்கு தயார் செய்பவர்கள் இந்த ஒரு நாள் பயிலரங்கத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இதுவரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 15/08/22
கல்வித் தகுதி- பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பயிற்சி முற்றிலும் இலவசம்.
குறிப்பு: புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்புக்கு: 8807042861, 9159988662, 9047979406