பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு மரியாதை.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில், தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு பேராவூரணி பகுதி பத்திரிகையாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் சங்க முன்னோடி கந்தப்பன் தலைமை வைத்தார். லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் எஸ்.கே .ராமமூர்த்தி, கனகராஜ் மற்றும் ஆர்.பி.ராஜேந்திரன் முன்னிலை வைத்தனர். நிகழ்வில், பேராவூரணி பகுதியைச் சார்ந்த பத்திரிகையாளர்களுக்கு, வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டு, சால்வை அணிவித்து, மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வினை, சங்க தலைவர் ராமநாதன், செயலாளர்கள் ஆதித்யன், பிரபு பொருளாளர் பன்னீர்செல்வம், ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். ஆசிரியர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி
செய்தியாளர்