கைஃபா சார்பில் ஐம்பெரும் விழா!

IT TEAM
0

 


"நீர் வளம் காத்து, வாழ்வில் உயர்வடைவோம்" கைஃபா ஐம்பெரும் விழாவில் உச்ச நீதிமன்ற நீதியரசர் எம் எம் சுந்தரேஷ் பேச்சு


 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ராஜ இன்பா திருமண மண்டபத்தில் கைஃபா சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்வில், கைஃபா செயலாளர் பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில், தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன், கைஃபாவின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார். கடலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்புச்செல்வன், பேராவூரணி வட்டாட்சியர் த சுகுமார், பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் சி.திலீபன், தஞ்சாவூர் கல்லணை கால்வாய் கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் இரா.பாண்டி ஆகியோர், கைஃபாவின் நீர் மேலாண்மை செயல்திட்டங்களை விரிவாக வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் வி.பாரதிதாசன், நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தையும், தஞ்சை பகுதியில் கைஃப ஆற்றி வரும் பணிகளையும் விரிவாக பேசி வாழ்த்தினார். மில்கிமிஸ்ட் நிர்வாக மேலாளர் சதீஷ்குமார் பேசுகையில், கைஃபாவின் பணிகளையும், கைஃபாவோடு மில்கிமிஸ்டின் நட்புறவையும் பேசி வாழ்த்தினார். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் இரா.சுரேஷ் குமார், நீர் மேலாண்மையின் இன்றைய தேவை குறித்து விரிவாக பேசினார். உச்ச நீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீரின் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டி, இன்றைய நாளில் நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தையும், அதற்கு கைஃபா செய்துவரும் பணிகளையும் பேசி, வாழ்த்தினார். கைஃபா பொருளாளர் தங்க கண்ணன் அமைப்பின் செயல்கள் குறித்து மைய உரையாற்றினார். கைஃபா தலைவர் கார்த்திகேயன் வேலுச்சாமி அமைப்பின் செயல்திட்டங்கள் குறித்து நோக்க உரையாற்றினார். நிகழ்வில், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாக, கைஃபா நிறுவனர் நவீன் ஆனந்தன் நன்றி கூறினார்.


முனைவர் 

வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top