பேராவூரணி அருகே ஆதனூர் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா.

IT TEAM
0


பேராவூரணி அருகே ஆதனூர் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா ஆதனூர் கிராமத்தில் உள்ள, புனித அன்னாள் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் அருட்திரு ஆரோக்கியசாமி துரை தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி, துணை தலைவர் சுபா.ஜான் டேவிட் நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் அருட்ரு ஆரோக்கியசாமி துரை அடிகளார், கிறிஸ்துமஸ் ஆசி கூறி, வாழ்த்துரை வழங்கினார். பள்ளிக் குழந்தைகள் தங்களின் திறமைகளை நாடகங்கள், பாடல்கள், நடனங்கள் மூலம் கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்வுகளை தத்ரூபமாக விளக்கிக் காட்டினர். நிகழ்வில், பள்ளியின் தாளாளர் அருள்ட்திரு ஆரோக்கியசாமி துரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி, பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி ராபர்ட் கிளாரா ஆகியோர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, அனைவருக்கும் பகிர்ந்து அளித்து, விழாவினை சிறப்பித்தனர். விழாவில், பள்ளி குழந்தைகளும், ஏராளமான பெற்றோரும், இல்லம் தேடி கல்வி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி ராபர்ட் கிளாரா செய்திருந்தார். முன்னதாக, ஆசிரியை குழந்தையம்மாள் வரவேற்புரையாற்ற, ஆசிரியை மெர்சி ஏஞ்சலா நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top