பேராவூரணியில் கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் கெயின் ஸ்போர்ட்ஸ் அகடமியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. விழாவிற்கு உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன் தலைமை வகித்தார். விழாவிற்கு, தலைமை பயிற்சியாளர் சுப்பு மற்றும் பயிற்சியாளர்கள் லட்சுமணன், விக்கி சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், திமுக பிரமுகர் தென்னங்குடி ராஜா, தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவர், தலைமை ஆசிரியர் மனோகரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் மற்றும் நகர முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு, சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, கேடயமும் பாராட்டு சான்றிதழும் வழங்கினர். விழாவில், மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் கராத்தே, பாரம்பரிய நடனங்கள் மற்றும் சாகச நிகழ்வுகளை மாணவ மாணவியர் நிகழ்த்திக் காட்டினர். விழாவினை, அகாடமியின் செயலாளர் கோகுலம் பாரதிராமன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். விழாவில், பேராவூரணி பகுதிகளில் உள்ள சமூக செயற்பாட்டாளர்களும், அறக்கட்டளை பொறுப்பாளர்களும், பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்