பேராவூரணியில் இருந்து திருப்பூர், கோயம்புத்தூருக்கு புதிய பேருந்து இயக்கம்.
பேராவூரணியில் இருந்து நாள்தோறும் பலரும் வணிகம் மற்றும் வேலை தொடர்பாக திருப்பூர் கோயம்புத்தூருக்கு சென்று வருகிறார்கள்.
ஒரு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இன்னும் ஒரு தனியார் பேருந்து பேராவூரணியில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படுகிறது.
நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு பேராவூரணியில் இருந்து புறப்படும் இந்த பேருந்து ஆலங்குடி, புதுக்கோட்டை, மணப்பாறை, தோகைமலை, கரூர், வெள்ளக்கோயில், திருப்பூர், பல்லடம் வழியாக அதிகாலையில் கோயம்புத்தூர் சென்று சேர்கிறது. இதுபோன்று கோயம்புத்தூரில் இருந்து மேற்கண்ட ஊர்களின் வழியாக பேராவூரணிக்கு ஒவ்வொரு நாளும் பேருந்து இயக்கப்படுகிறது.
முன்பதிவுக்கு புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள
அமுதம் அரிசி கடையை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று தொடங்கிய இந்த சேவையை ஆயர் த ஜேம்ஸ் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் அமுதம் அரிசி கடை உரிமையாளர் சித. திருவேங்கடம், பாரதி ந.அமரேந்திரன், ரெட்டவயல் இரா.மாரிமுத்து, தா.கலைச்செல்வன், மருத.உதயகுமார், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், திருவள்ளுவர் பயிற்சி கூட ஆசிரியர் ரெ. சந்தோஷ், தமிழ் வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர் த.பழனிவேல், ஆகியோர் முதல் பயணத்தை தொடங்கி வைத்தனர்.
முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
9865621895, 8838523922