ரயில்வே துறையை கண்டித்து பேராவூரணியில் பெரும் போராட்டம்.

IT TEAM
0


திருவாரூர் காரைக்குடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கிய காலத்தில் இருந்து பேராவூரணி மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.  


அகல ரயில் பாதை பணிகள் முடிந்து ரயில் போக்குவரத்து தொடங்கிய பின்னரும் கிராமங்களுக்குள் செல்லும் பாதைகளில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு கீழ்ப்பாலம் அமைப்பதாக கூறி ஊரகப் பகுதி சாலைகளை எல்லாம் படுகுழிகளாக மாற்றி வந்தது ரயில்வே நிர்வாகம்.  


எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருந்த இப்பகுதி மக்கள் தற்போது கொதித்துப் போய் உள்ளனர்.  


இப்பகுதிகளில் செல்லும் எந்த விரைவு ரயில்களும் பேராவூரணியில் நின்று செல்லாது என்ற ரயில்வே துறையின் அறிவிப்பு தான் பொதுமக்களை கோபம் கொள்ள வைத்திருக்கிறது.  


அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேராவூரணியின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு பலமுறை கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. எந்த கோரிக்கை விண்ணப்பத்திற்கும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.


இந்நிலையில் பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் தானாக முன்வந்து ஆதரவளித்து வருகின்றன.


இந்தப் போராட்ட அறிவிப்பிற்கு பின்னராவது மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட பேராவூரணி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ரயில்வே துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top