பேராவூரணியில் வரும் ஞாயிற்றுக்கிழமை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா.

IT TEAM
0


பேராவூரணியில் வரும் ஞாயிற்றுக்கிழமை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா.


 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில்  வரும் ஞாயிற்றுக்கிழமை, மாலை ஆறு மணிக்கு, எம்எஸ் விழா அரங்கில்,  ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற இருக்கிறது.  இது குறித்து புதிய தலைவராக பணி ஏற்கும் எஸ்.சரவணன் கூறுகையில்  "பணியேற்பு விழாவில் முதன்மை விருந்தினராக  மாவட்ட ஆளுநர் ஏகேஎஸ்.எஸ் .பாலாஜி பங்கேற்கவும், சிறப்பு விருந்தினராக மாநிலக் கல்லூரி பேராசிரியர் மற்றும் சூரியன் எப்எம், கலைஞர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் முனைவர் இரா.ஜோதிபாசு பங்கேற்கவும், புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்க மண்டல துணை ஆளுநர் எஸ்.பைசல் அகமது பங்கேற்கவும் இசைந்துள்ளார்கள்.  அது சமயம் அனைவரும் வந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்" என்றார் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பணியேற்க உள்ள தலைவர் எஸ்.சரவணன்,  செயலாளர் டாக்டர் முத்துக்குமார் மற்றும் பொருளாளர் எஸ்.சதீஷ்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர். 


 முனைவர் 

வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top