பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு தனியார் மண்டபத்தில், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானிய விலையில் பழ மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்தார்.
இதில், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் வள்ளியம்மை, துணை தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமார், உதவி தோட்டக்கலை துறை அலுவலர் மெஞ்ஞான மூர்த்தி, ராஜா, முத்துவேல் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
இதில், சொர்ணக்காடு, படப்பனார் வயல், பட்டத்தூரணி ஆகிய பகுதிகளைச் சார்ந்த 300 பயனாளிகளுக்கு மா, கொய்யா, பப்பாளி, பலா, நெல்லி உள்ளிட்ட ஏழு வகையான பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இதில், அரசு மானியம் ரூ.150, விவசாயிகள் பங்குத் தொகை ரூ.50 என ரூ.200 மதிப்பிலான 7 மரக்கன்றுகள் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்பட்டன.