பேராவூரணி குமரப்பா பள்ளியில் நாளை (செப், 28) வியாழக்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
பேராவூரணி லயன்ஸ் கிளப், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பேராவூரணி கிளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நாளை செப்டம்பர் 28 வியாழக்கிழமை அன்று, பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா பள்ளியில் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடத்த உள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சிவநாதன், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக மாநிலம் முழுவதும் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில் கண்புரை நோய், சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளுக்கான கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட அனைத்து வகையான கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்க உள்ளனர். தேவைப்படுவோருக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கண்ணில் லென்ஸ் பொருத்தப்படும்.
பொதுமக்கள் முகாமிற்கு வரும் போது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தொலைபேசி எண் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் உயர் ரத்த அழுத்த நோய், ஆஸ்துமா, சர்க்கரை நோய், இதய நோய் அல்லது உடம்பில் வேறு ஏதேனும் நோய் தொந்தரவு இருந்தால், அருகில் உள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கண்புரை அறுவை சிகிச்சை செய்ய தகுதி சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமிற்கு வரவேண்டும். கண் அறுவை சிகிச்சைக்கு செல்வோர் உரிய ஏற்பாடுகளுடன் மாற்று உடையுடன் வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்