குறுவட்ட அளவிலான போட்டிகளில் பொன் காடு ஊராட்சி ஒன்றிய நிலை பள்ளி மாணவர்கள் சாதனை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி குறுவட்ட அளவிலான தடைகளை மற்றும் குழு போட்டிகளில் பேராவூரணி பொன்னாங்கண்ணி காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். இறகு பந்து இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவில் வெற்றியும், வலைப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றியையும், கேரம் பெண்கள் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் வெற்றியும், சதுரங்க போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியரை, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு , பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சி குழு ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.