தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,
பேராவூரணி வட்டார அளவிலான 54 ஆம் ஆண்டு குறுவட்ட தடகள போட்டிகள், குழு விளையாட்டு போட்டிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பேராவூரணியில் வியாழன், வெள்ளி இருநாட்கள் நடைபெற்றது.
இப்போட்டியில், பல்வேறு பள்ளிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவர் பிரிவில், புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டமும், பெண்கள் பிரிவில், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டமும், மாணவ, மாணவிகள் பிரிவில் ஒட்டு மொத்தமாக குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
விழாவில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி.மாரிமுத்து வரவேற்றார். இதில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.