பேராவூரணியில் அரசுக் கல்லூரி மாணவியர் விடுதி காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

IT TEAM
0

 



தஞ்சாவூர், நவ.29 - 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர்களுக்கான புதிய தங்கும் விடுதி, ரூபாய் 2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொலிக் காட்சி மூலம் சென்னையில் இருந்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார். 


இதையொட்டி, பேராவூரணி அரசுக் கல்லூரி மாணவியர் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் குத்துவிளக்கேற்றி மாணவியர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். 


இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி, வட்டாட்சியர் தெய்வானை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுதாராணி, அரசு கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி, விடுதி காப்பாளர் கவிதா, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சக்ரவர்த்தி (முடச்சிக்காடு), குலாம்கனி (ஊமத்தநாடு), பேராவூரணி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், செருவாவிடுதி துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top