பேராவூரணி வட்டாட்சியராக ரா.தெய்வானை பொறுப்பேற்பு
தஞ்சாவூர், நவ.1 -
பேராவூரணி வட்டாட்சியராக ரா.தெய்வானை புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்களை பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பேராவூரணி வட்டாட்சியராக பணியாற்றி வந்த த.சுகுமார் பட்டுக்கோட்டை வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், பட்டுக்கோட்டை நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக இருந்த, ரா.தெய்வானை பேராவூரணி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து புதன்கிழமை காலை ரா.தெய்வானை பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்