பேராவூரணியில் நடைபெற்ற பொதுமக்களுக்கான சிறப்பு மனு முகாமில், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், பேராவூரணி வர்த்தக கழகம் கோரிக்கை. பேராவூரணி தனம் மகாலில் நடைபெற்ற பொதுமக்களுக்கான சிறப்பு மனு முகாமில், பேராவூரணி வர்த்தக கழகம் சார்பில் தலைவர் ஆர் பி ராஜேந்திரன் செயலாளர் எஸ் திருப்பதி மற்றும் பொருளாளர் எல்ஏஎம்.சாதிக் அலி ஆகியோர் அளித்த மனுவில், பேராவூரணி தொகுதியில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பேராவூரணி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் எனவும், போக்குவரத்து காவல் பிரிவை உருவாக்கித் தர வேண்டும் எனவும், கடைவீதி பகுதியில் நடைபெறும் திருட்டு மற்றும் ஏமாற்று குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை நேரில் அளித்தனர்.