தஞ்சாவூர், டிச.7 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம், ஆவணத்தில் உள்ள ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் வரவேற்றார்.
கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினர் உ.துரைமாணிக்கம், ஒன்றியக் குழு துணை தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, உறுப்பினர் பெரியநாயகி ஆகியோர் பல்வேறு விவரங்கள் குறித்து விரிவாக பேசினர்.
தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் விளக்கம் அளித்துப் பேசினார்.
ஒன்றியக் குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் பதிலளித்து பேசினார்.
கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அமிர்த வள்ளி கோவிந்தராஜ், ரேவதி கண்ணன், ராஜலட்சுமி ராஜ்குமார், ராஜப்பிரியா, மாலா போத்தியப்பன், நவநீதம் ஆறுமுகம், பாக்கியம் முத்துவேல், சுந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.