பேராவூரணி, டிச 21
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, பேராவூரணி தாலுக்கா சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருவதால், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வீடுகளில் உள்ளே தண்ணீர் புகுந்து பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இந்த, பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்க முயற்சியில் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பேராவூரணி தாலுக்கா சார்பில், அரிசி மூட்டைகள், சேமியா பாக்கெட்டுகள், ரவை பாக்கெட்டுகள், சீனி பாக்கெட்டுகள், கோதுமை மாவு பாக்கெட்டுகள், காபி தூள் பாக்கெட்டுகள், பிஸ்கட் பாக்கெட்டுகள், கொசுவத்தி பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள், பெட்ஷீட்கள், துண்டுகள், மளிகை பொருட்கள் போன்ற வெள்ள நிவாரண பொருட்களை எம்.எல்.ஏ அசோக்குமார், தாசில்தார்(பொ) சாந்தகுமார், குமரப்பா பள்ளி அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி, துணை தாசில்தார்கள் சுப்பிரமணியன், தர்மேந்திர ஆகியோர் அனுப்பி வைத்தனர்.