பேராவூரணி தாலுக்கா ஆதனூரில் பொங்கல் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு, பொங்கல் விழா குழு தலைவர் ம.ஆ.இருதயராஜ் தலைமை வகித்தார். நாள் முழுவதும் சிறியவர், பெரியவர், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பங்குபெறும் வகையில், ஸ்கிப்பிங், உருளைக்கிழங்கு சேகரித்தல், சைக்கிள் வேகமாக ஓட்டுதல், கைப்புறா போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறப்பு விருந்தினராக, ஆதனூர் கவுன்சிலர் காரல்மார்க்ஸ் கலந்து கொண்டார். விழாவில், விழா கமிட்டியாளர்கள் சின்னையன், சுந்தர்ராஜ், நாகூரான், சந்துரு, பாலமுருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவினை, நா.மணிகண்டன் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். விழாவின் முடிவில், வெற்றிப்பெற்றோருக்கும், சிறப்பாக பங்கேற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.