ஆதனூரில் பல் மருத்துவ முகாம்.

IT TEAM
0

 


பேராவூரணி தாலுக்கா ஆதனூர் புனித அன்னாள் ஆலய வளாகத்தில், கோமதி நவீன பல் மருத்துவமனை நடத்திய இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, ஆதனூர் புனித அன்னாள் ஆலய பங்குத் தந்தை அருட்திரு ஏஎம்.ஆரோக்கியசாமி துரை அடிகளார் தலைமை வகித்தார். முகாமினை,  பல் அறுவை சிகிச்சை மருத்துவர் வி.ஜி. விஜய் மோகன் தலைமையிலான குழுவினர் முகாமை நடத்தினர். முகாமில் பற்கள் பரிசோதிக்கப்பட்டு, பாதிப்பின் அளவிற்கு ஏற்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டு, மருந்துகள் கொடுக்கப்பட்டன. தொடர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு, ஆலோசனை வழங்கி மருத்துவமனைக்கு சென்று தொடர் சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை கொடுக்கப்பட்டது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top