கிரசன்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பு நடத்திய உயிர் காக்கும் தோழர்கள் சந்திப்பு மற்றும் விருது வழங்கும் விழாவில், பேராவூரணி மகாசக்தி அறக்கட்டளை நிறுவனர் ஜெயலட்சுமிக்கு, சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது. நிகழ்வில், வருவாய் துறை கூடுதல் ஆணையர் கவிதா ராமஜெயம், மகாராஜா ஜவுளி குழும உரிமையாளர் முகமது ரஃபி, திரைப்பட நடிகர் ராமசாமி, சமூக செயற்பாட்டாளர் கவிஞர் ரேகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேராவூரணி மகாசக்தி பெண்கள் தொண்டு நிறுவனர் ஜெயலட்சுமியின், கைவிடப்பட்ட பெண்களுக்கான சமூக செயல்பாடு, முதியோருக்கான சேவை முதலியவற்றை பாராட்டியும் அங்கீகரித்தும் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, விருது பெற்ற ஜெயலட்சுமியை, சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.