தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு, பேராவூரணி வட்டார தலைவர் பாலச்சந்தர் தலைமை வகித்தார். பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திர வட்டார செயலாளர்கள் லட்சுமணசாமி, சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் சுப .குழந்தைசாமி , முன்னாள் மாநில பொது குழு உறுப்பினர் நீலகண்டன், சேதுபாவாசத்திர வட்டார பொருளாளர் திருஞானவேல், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கு.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட இரண்டு வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். போராட்ட கோரிக்கை விளக்க உரையை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் செ. ராகவன்துரை, ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். போராட்டத்தில் இரண்டு வட்டாரங்களை சேர்ந்த 75 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். பேராவூரணி வட்டாரப் பொருளாளர் செல்லத்துரை நன்றி கூறினார்.
பேராவூரணியில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்.
பிப்ரவரி 16, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க