பேராவூரணி ஆதனூரில் மாரத்தான் - சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் மற்றும் தொழிலதிபர் அருள்சூசை பங்கேற்று பரிசளிப்பு

IT TEAM
0

 


பேராவூரணி வட்டம், ஆதனூர் கிராமத்தில் சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு, உடல் ஆரோக்கியம் விளையாட்டு மற்றும் கல்வி விழிப்புணர்வை வலியுறுத்தி, ஆதனூர் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மேக்ஸ் அருள் பவுண்டேஷன் இணைந்து நடத்திய  சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மேக்ஸ் அருள் பவுண்டேஷன் நிறுவனர் எஸ்.அருள்சூசை தலைமை  வகித்தார். பட்டுக்கோட்டை சார் நில அளவை ஆய்வாளர் எஃப்.ஜான் கென்னடி வரவேற்றார். 14 வயதிற்குட்பட்டோர் ஆண் பெண் தனியாகவும், 19 வயதிற்கு உட்பட்டோர் ஆண் பெண் தனியாகவும் மாரத்தான் நடைபெற்றது. விழாவில், சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், மேக்ஸ் அருள் பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தொழிலதிபர் எஸ் அருள்செய் ஆகியோர்,  வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் பேசுகையில், "உடல் நலனை பேணுகிற இந்த மாரத்தான் போட்டி தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெற வேண்டும்" என வாழ்த்தி பேசினார். விழாவில், திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் என்.எஸ்.சேகர், காவல்துறை உதவி ஆய்வாளர் புகழேந்தி, திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழக பேச்சாளர் அப்துல் மஜீது, பட்டிமன்றம் நடுவர் கோவி.தாமரைச்செல்வன், புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருள் சகோதரி ஜெஸ்ஸி லிட்டில் ரோஸ், கிராம பொறுப்பாளர்கள் தலைவர் ஐ.மான்சிங், அந்தோணி செல்வராஜ், சின்னச்சவரி, அன்பானந்தம் ரயில்வே ஓய்வு, ஆதனூர் கவுன்சிலர் காரல் மார்க்ஸ், பத்திரிக்கையாளர்கள் கான் முகமது, ஜகுபர் அலி,  நீலகண்டன், திருஞானம் மற்றும் மேக்ஸ் அருள் பவுண்டேஷன் சோசியல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். விழாவுக்கான காண ஏற்பாடுகளை, சார் ஆய்வாளர் எஃப்.ஜான் கென்னடி, ஆனந்தராஜ், காவல்துறை அருண் ஆரஞ்சு ஆகியோர் செய்து இருந்தனர். இறுதியாக சந்தியாகு நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top