நூறுநாள் வேலைத் திட்டத்தை சீர்குலைப்பதைக் கண்டித்து பரப்புரை இயக்கம்

IT TEAM
0

 பேராவூரணி, மார்ச்.25 - 

வகுப்புவாத பாரதிய ஜனதா கட்சியை நிராகரிப்போம், வேலை பெறும் சட்டப்பூர்வ உரிமையை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு, தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மார்ச் 5 முதல் மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பரப்புரை இயக்கம் நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியக் குழு சார்பில், பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தொடங்கி, கழனிவாசல், பெரியகத்திக்கோட்டை, பெருமகளூர், ரெட்டவயல், பூலாங்கொல்லை, மணக்காடு, சொர்ணக்காடு, வளப்பிரமன்காடு, சித்தாதிக்காடு, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், செருவாவிடுதி, திருச்சிற்றம்பலம், புனல்வாசல், ஒட்டங்காடு, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பரப்புரை இயக்கம் நடைபெற்றது. இதில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் மாநிலக் குழு உறுப்பினர் வி. ராஜமாணிக்கம், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் எம். சித்திரவேலு, ஒன்றியத் தலைவர் பி.ஏ.கருப்பையா, சிபிஐ நகரச் செயலாளர் மூர்த்தி, விவசாயிகள் மாவட்ட துணைச் செயலாளர்  எஸ்.ஜெயராஜ், செல்வராஜ், பி.சண்முகம், நீலகண்டன், மைக்கேல் ராஜ், தில்லைநடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top