பேராவூரணி தாலுக்கா ஆதனூர் கிராமத்தில் புனித அன்னாள் ஆலய வளாகத்தில் பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை தலைமையில் வருவாய்த் துறையினர், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் எனும் கோசத்தை முன்னிறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். பாராளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில், பொதுமக்கள் மத்தியில் அனைவரும் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்வில் வட்டாட்சியர் தெய்வானை தலைமை வகித்தார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், வருவாய் ஆய்வாளர் ஜெயதுரை, பேராவூரணி 2 கிராம நிர்வாக அலுவலர் பெரியநாயகி , கிராம உதவியாளர்கள் சுரேஷ், சரோஜா, ரிஸ்பால் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், கிராம பொறுப்பாளர்கள் சின்னசவரி, ஆர்சி சபையின் நிர்வாகிகள் முனைவர் வேத கரம்சந்த் காந்தி, அன்பானந்தம் ரயில்வே ஓய்வு, அந்தோணிசாமி ஆசிரியர், இருதயராஜ் ஓய்வு உதவி ஆய்வாளர், சர்வேயர் ஜான் கென்னடி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.