பேராவூரணியில், ரூ.5 கோடியே 50 லட்சத்தில் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

IT TEAM
0

 


பேராவூரணியில், ரூ.5 கோடியே 50 லட்சத்தில் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா தற்போதுள்ள அரசு மருத்துவமனை கட்டிடம் 1971 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, 1977 திறந்து வைக்கப்பட்டது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 48 ஆண்டுகள் ஆன நிலையில், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டித் தரப்படும். நவீன வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என கடத்த சட்டமன்றத் தேர்தலின் போது பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் உறுதியளித்தார். மேலும், இதுகுறித்து சட்டமன்றத்திலும், சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் விடுத்த கோரிக்கையை ஏற்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரையின் படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராவூரணி அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூபாய் 5 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். மருத்துவமனை தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதையடுத்து, சனிக்கிழமையன்று காலை 10:30 மணிக்கு பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, பேரூர் கழகச் செயலாளர் என்.எஸ்.சேகர், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காமேஸ்வரி, மருத்துவர்கள் இலக்கியா, பாலகுமாரன், சுரேஷ், ரம்யா, செவிலியர்கள் சித்ரா, லதா, பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஆர்.ஹரிதரன், மல்லிகை சிதம்பரம், அரசு ஒப்பந்ததாரர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top