பேராவூரணி, பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய கிழக்குப் பள்ளி, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பூக்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அருள் (பேராவூரணி), டாக்டர் ராமலிங்கம் (சேதுபாவாசத்திரம்) முன்னிலை வகித்தனர். போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மு. கி.முத்துமாணிக்கம், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அ.அப்துல் மஜீத், தனபால், மாவட்டக் கவுன்சிலர் சுவாதி காமராஜ், பேரூராட்சி ஹபீபா பாருக், மருத்துவர் ரஞ்சித், தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
மார்ச் 03, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க