தஞ்சாவூர், மார்ச்.8:-
புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவர்களின் கிராம வேளாண் பணி அனுபவத் திட்ட துவக்க விழா, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர்கள்
தங்க.ராமஜெயம், (செருவாவிடுதி தெற்கு),
டி. விஜயராமன், (செருவாவிடுதி வடக்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியக் கவுன்சிலர் மாலா போத்தியப்பன், கிராம நிர்வாக அலுவலர் எஸ். இளங்கோவன், கிராம நிர்வாக அலுவலர், செருவாவிடுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக பேராவூரணி வேளாண் உதவி இயக்குனர்(பொ), எஸ்.ராணி பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும் இத்திட்டத்தின் நோக்கம் குறித்தும், மாணவர்கள் செய்யவிருக்கும் செயல் விளக்கம், வேளாண் பயிற்சிகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
இவ்விழாவில், வேளாண் உதவி அலுவலர்கள், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.