பேராவூரணி, மார்ச்.4 -
தஞ்சாவூர் மாவட்டம்,
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் அமிர்தவள்ளி தலைமையில் நடைபெற்றது.
இதில், ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரவர்த்தி, துணை தலைவர் நீலகண்டன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ராமு, ஆசிரியை மஞ்சுளா,
பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.