100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஏ.எஸ்.ஏ.தெட்சணாமூர்த்தி நடத்திய உலக சாதனை நிகழ்வு

IT TEAM
0

 


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில்,  ஜனநாயக கடமையை தவறாமல் செய்ய வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க தலைவர் ஏ.எஸ்.ஏ.தெட்சணாமூர்த்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்காளிக்க வலியுறுத்தி, 87 நொடியில் 100 தடவைகள், வாக்களிக்கும் ஆட்காட்டி விரலை மேல் பக்கம் முழுவதும் மடக்கி சாதனை செய்தார்.இதனை இன்டர்நேஷனல் பிரைடு வேர்ல்டு ரெக்கார்டர் சிஇஓ பாலசுப்பிரமணி, சேர்மன் கலையரசி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினார்.அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.நிகழ்வில் தனியார் பள்ளிகள் தாளாளர் சங்க நிறுவனர் முனைவர் ஸ்ரீதர், லயன்ஸ் சங்க பொறுப்பாளர் பாண்டியராஜன், நகர வர்த்தக கழக தலைவர் ஆர் பி ராஜேந்திரன், லயன்ஸ் சாசன தலைவர் நீலகண்டன், பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட வர்த்தக கழக பிரமுகர்கள், லயன்ஸ் சங்க பிரமுகர், என பேராவூரணி பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். உலக சாதனை செய்த சமூக ஆர்வலர் ஏ.எஸ்.ஏ.தெட்சணாமூர்த்தி-ஐ பலரும் பாராட்டிவருகின்றனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top