பேராவூரணி தாலுக்கா ஆதனூர் கிராமத்தில், ஏறத்தாழ நான்கு தலைமுறைக்கு மேலாக காவல் தெய்வமாக இருந்து, அருள் ஆசி வழங்கி வருகிற புனித சந்தியாகப்பருக்கு சிற்றாலயம் கட்ட வேண்டும் என ஆர்.சி சபை நிர்வாகிகள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆதனூர் சர்வேயர் ஜான் கென்னடி முன்னெடுப்பின் மூலம், வீரக்குறிச்சி தொழிலதிபர் மற்றும் மேக்ஸ் அருள் பவுண்டேஷன் நிறுவனர் அருள்சூசை, புனித சந்தியாகப்பர் சிற்றாலய கட்டுமானத்திற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளார். அதனையடுத்து, ஆர்.சி சபை நிர்வாகிகள் தொழிலதிபர் அருள் சூசை அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அதன்படி, தொழிலதிபர் அருள்சூசை வழிகாட்டுதல்படி, கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், ஆதனூர் பங்குத்தந்தை அருட்திரு ஆரோக்கியசாமி துரை அடிகளார் தலைமை வகித்து, புனிதம் செய்து பூமி பூஜையை தொடக்கி வைத்தார். நிகழ்வில், ஆதனூர் ஆர்.சி சபை நிர்வாகிகள் அன்பானந்தம், இருதயராஜ் காவல்துறை ஓய்வு, பிரான்சிஸ் கண்டாக், அந்தோணிசாமி ஆசிரியர், ஐசக் நியூட்டன், மரிய சவரிநாதன், பாலசிங்கம், செல்வஸ்டார், ராஜதுரை, பிரிட்டோ மற்றும் கிராம பொறுப்பாளர்கள் மான்சிங், அந்தோணி செல்வராஜ் மற்றும் சின்னசவரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.