தஞ்சாவூர், ஏப்.6 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சமூக சேவை அமைப்பான, 'ழ' - பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை பொறுப்பாளரும், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினருமான நா.அசோக்குமார் தலைமை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள், வர்த்தகர் கழகப் பொருளாளர் சாதிக் அலி மற்றும் முக்கியப் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பள்ளிவாசல் நிர்வாக ஜமாத் தலைவர் முத்தலிப் வரவேற்றார். நிறைவாக ஜமாத் பொருளாளர் கே.கான்முகமது நன்றி கூறினார்.