பேராவூரணி தாலுக்கா, ஆதனூர் கிராமத்தில் புனித அன்னாள் ஆலயத்தில், ஈஸ்டரை முன்னிட்டு, உயிர்த்த ஏசு சுருபம் தாங்கிய தேர், வீதி உலா நடைபெற்றது. ஈஸ்டர் முன்னிட்டு, ஆலய பங்குத்தந்தை அருட்திரு ஆரோக்கியசாமி துரை அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு, அதன் பின்பு உயிர்த்த இயேசுவின் சுருபம் தாங்கிய தேர் மந்திரிக்கப்பட்டு, வீதி உலா நடந்தது. நிகழ்வில், புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள், ஆதனூர் கிராம பொதுமக்கள், தேருக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, ஆர் சி சபை செயலாளர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி பொருளாளர் அ.அன்பானந்தம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.