பேராவூரணி தாலுக்கா ஆதனூர் கிராமத்தில், கிராம மக்களால் பல தலைமுறைகளாக வழிபட்டு வருகிற புனிதரான, புனித வனத்துச் சின்னப் பொருள் ஆலய ஆண்டு திருவிழா நடைபெற்றது. ஆதனூர் பங்குத்தந்தை அருட்திரு ஆரோக்கியசாமி துரை அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து ஆர்சி சபை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களால் தயாரிக்கப்பட்டிருந்த உணவுகள் மந்திரிக்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்வில், அதன் ஒரு கவுன்சிலர் காரல்மார்க்ஸ் மற்றும் ஆர்சி சபை நிர்வாகிகள் அந்தோணிராஜன் ரயில்வே ஓய்வு, அருள்செல்வம், ஐசக் நியூட்டன், அந்தோணிசாமி ஆசிரியர், ஜான் போஸ்கோ, அருளானந்தம், சர்வேயர் ஜான் கென்னடி, பாலசிங்கம், பிரிட்டோ, மில்டன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆர் சி சபை செயலாளர் பேராசிரியர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி மற்றும் பொருளாளர் அன்பானந்தம் ரயில்வே ஓய்வு உள்ளிட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நிகழ்வில் அதன் ஒரு கிராம பொறுப்பாளர்கள், பழைய பேராவூரணி கவுன்சிலர் ஆனந்தன், நீலகண்டன் நெடுஞ்சாலைத்துறை, சமூக பாதுகாப்புத்துறை சேவியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் 1500 க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு, புனித வனத்து சின்னப்பர் தரிசனம் பெற்று சென்றனர்.