பட்டுக்கோட்டை அருகில் உள்ள வீரக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல ஆண்டு பெருவிழா கொடியேற்ற விழா மற்றும் ஆலய திருப்பணிகள் திறப்பு விழா, வருகிற மே ஒன்றாம் தேதி, புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. நிகழ்வில், தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் பேரருள்திரு முனைவர் சகாயராஜ் ஆலய திருப்பணிகளை அர்ச்சித்து திறந்து வைக்கிறார். சென்னை மயிலை மேனால் பேராயர் மேதகு ஏஎம்.சின்னப்பா திருக்கொடியை புனிதப்படுத்தி, ஏற்றி வைக்கிறார். தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி விழா திருப்பலி நிறைவேற்றுகிறார். அகில இந்திய மறை மாவட்ட குழுக்கள் பேரவையின் தலைவர் அருள்திரு ராய் லாசர் திருத்தல வரலாற்று புத்தகத்தை வெளியிடுகிறார். பட்டுக்கோட்டை மறைவட்ட அதிபர் அருள்திரு அந்தோணிசாமி திருத்த வரலாற்று முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார். சார்ஜா அரசின் சிறப்பு திட்ட இயக்குனர் எட்வின் மரிய அரசு, மின் அலங்கார விளக்குகளை ஒளி ஏற்றி தொடங்கி வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை மேக்ஸ் அருள் பவுண்டேஷன் நிறுவனர் எஸ்.அருள்சூசை செய்து வருகிறார். அனைத்து நிகழ்வுகளையும் திருத்தல பங்குத்தந்தை அருள்திரு ஜோசப் குழந்தை மற்றும் பங்கு மன்றம், கிராம நிர்வாகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.